ஷா ஆலாம், ஜூலை.21-
தனது முன்னாள் காதலியைக் கத்தியால் குத்தியதாக தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், இன்று ஷா ஆலாம், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஒரு சீன நாட்டுப் பிரஜையான 22 வயது யூ வேய் என்ற அந்த மாணவர், சன்வேயில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஜுலை 14 ஆம் தேதி இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த இளைஞர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








