பள்ளிகளில் நடத்தப்படும் கலை, கலாச்சார நடவடிக்கைகளின் போது தங்களின் சொந்த மற்றும் பிற இனத்தவர்களின் பாரம்பரிய ஆடைகளை அணிவதற்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் அரசாங்கத்தின் வழிகாட்டி முறைக்கு ஏற்ப அந்த பாரம்பரிய உடைகள் இருந்திட வேண்டும் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பள்ளிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடத்தப்படும் போது மாணவர்கள் பல இனங்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து வருவது வழக்கமான நடைமுறையாகும்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பள்ளியில் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் மாணவி ஒருவர் இந்தியர்களின் பாரம்பரிய ஆடையான சேலையை அணிவதற்குப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தடை விதித்ததாக வெளியான செய்தி தொடர்பில் கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
சீன மாணவர்கள் தங்களின் பாரம்பரிய உடையான சியோங்சாம் அல்லது ஹன்ஃபூ ஆடைகளை அணிய பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், இந்திய மாணவிகள் சேலை அணிவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் சேலை அணிவது என்பது பள்ளியின் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் அந்த ஆசிரியர் தடை விதித்ததாக கூறப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சு இந்த விளக்கத்தை தந்துள்ளது.
1984 ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின்படி பள்ளியில் நடத்தப்படும் கலை, கலாச்சார நிகழ்வுகளில் மாணவர்கள் நேர்த்தியான முறையில் தங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய அனுமதிக்கப்படுவர். அதேபோன்று தங்களுக்கு பொருத்தமான வளையல், சங்கிலி மற்றும் இதர அணிகலன்களையும் அணிவதற்கு அனுமதி உண்டு என்று கல்வி தெளிவுபடுத்தியுள்ளது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


