Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கம்பாரில் ஆற்றோரத்தில் ஆடவர் சடலம் கண்டு பிடிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கம்பாரில் ஆற்றோரத்தில் ஆடவர் சடலம் கண்டு பிடிப்பு

கம்பார், டிச.4-


பேரா, கம்பார், ஜாலான் கோத்தாபாரு – மாலிம் நாவார் சாலையில் சுங்கை கெருவின் என்ற இடத்தில் ஆற்றோரத்தில் வயோதிகர் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது.

நேற்று மாலை 6.15 மணியளவில் பொது மக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து எந்தவொரு அடையாள ஆவணமில்லாத அந்த ஆடவரின் சடலம், தீயணைப்பு மீட்புப்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டதாக கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் நஸ்ரி டாவுட் தெரிவித்தார்.

கருப்பு நிறத்திலான 60 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு அவரின் உடல் கம்பார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →