May 22, 2026
Thisaigal NewsYouTube
உணவகத்தில் அட்டூழியம் புரிந்த நபர் கைது
தற்போதைய செய்திகள்

உணவகத்தில் அட்டூழியம் புரிந்த நபர் கைது

Share:

உலு சிலாங்கூர், பிப்ரவரி 24 -

உலு சிலாங்கூர்,புக்கிட் பெருந்துங் கில் உணவகம் ஒன்றில் நுழைந்து ,கத்தியை ஏந்திக்கொண்டு அட்டகாசம் புரிந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மதுபோதையில் இருந்து இருக்கக்கூடும் என்று நம்பப்படும் அந்த நபர், நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் சம்பந்தப்பட்ட உணவகத்திற்குள் நுழைந்து, வாடிக்கையாளர்களை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது என்று உலுசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் Ahmad Faizal Tahrin தெரிவித்தார்.

உணவகத்திலிருந்து அந்த ஆடவர் விரப்பட்டப்பட்ட போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அந்த நபர் காயமுற்றதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நபர், அந்த உணவகத்தில் நுழைந்து அட்டகாசம் புரியும் காட்சியை காட்டும் வீடியோ காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக அஹ்மாட் பைசால் தெரிவித்தார்.

Related News