Dec 12, 2025
Thisaigal NewsYouTube
அரசாங்க ஊழியர்களுக்கான புதிய சம்பள உயர்வு ஜனவரியில் வழங்கப்படும்
தற்போதைய செய்திகள்

அரசாங்க ஊழியர்களுக்கான புதிய சம்பள உயர்வு ஜனவரியில் வழங்கப்படும்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.11-

பொதுச் சேவைத்துறையில் SSPA எனப்படும் பணி ஓய்வு முறையைத் தேர்வு செய்த அரசாங்க ஊழியர்கள், அந்த சம்பளத் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட புதிய சம்பள உயர்வைப் பெறவிருக்கின்றனர்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சம்பள நாளான 22 ஆம் தேதி இந்தச் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பள உயர்வானது, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி பெற்ற ஆகக் கடைசிச் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு, கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று பொதுச் சேவை இலாகாவின் சம்பளம் மற்றும் அலவன்ஸ் தொகை பிரிவின் சம்பளக் கொள்கை துணை இயக்குநர் முகமட் ஷாஹிர் ஷாரி தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதல் தேதியிலிருந்து புதிய சம்பள முறை அமலுக்கு வந்த போதிலும் ஜனவரி 22 ஆம் தேதி சம்பள நாளன்று இந்தச் சம்பள உயர்வு வழங்கப்பட்டு விடும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News