கெடா,ஜூலை 27-
Kedah, Kulim Hi Tech Park- கில் உள்ள Kulim Utama- குடியிருப்புப் பகுதியின் அருகாமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்ட கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Kulim Utama- வீடமைப்புப் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் இன்று காலையில், கட்டுமானப்பணி நடந்துவரும் பகுதியில் ஒன்று கூடி தாங்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
Kulim Hi Tech Park- தொழிற்சாலைகள் இயங்கும் ஒரு தொழிற்பேட்டைப் பகுதியாகும். அங்கு பல குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. 2022 ஆம் ஆண்டிலிருந்து Kulim Utama FASA 1 எனும் குடியிருப்பு முன்புறம் மற்றொரு புதிய வீடமைப்புத் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பு மரங்கள், காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் கூலிம் உத்தாமா வீடமைப்புப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு பெரும் நெருக்கடியை தந்தது. பின்னர் அதற்கு தீர்வுகள் காணப்பட்டதாக குடியிருப்பாளர்களில் ஒருவரான BRIDTHO தெரிவித்தார் .
2023 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த கட்டமாக கட்டிடங்கள் எழுப்புவதற்காக மணல் சலிக்கப்பட்டு வருகிறது. இதனால் கூலிம் உத்தாமா மக்கள் கடந்த ஓராண்டுக் காலமாக பல்வேறு சுகாதாரக் தூய்மைக்கேட்டுப் பிரச்னையை எதிர்நோக்கி வருவதாக BRIDTHO தெரிவித்தார் .
நேரம் காலமின்றி வீட்டின் உள்புறமும், வெளிபுறமும் தூசு படிந்து வருகிறது. தூசினால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் நிலை பாதிப்புக்களும் ஆளாகி வருகின்றனர் என்று BRIDTHO குறிப்பிட்டார்.
இப்பிரச்சனைப் பற்றி பல முறை கூலிம் ஹய் தேக் ஊராட்சி மன்றத்திடமும் சுற்றுச்சூழல் இலாகாவிடமும் புகார் செய்துள்ளோம் . இக்குடியிருப்புப் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.. இந்த வீடமைப்புத் திட்டத்தினால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறுவதில்லை.லாரிகளின் சத்தம், மணல் தூசு என சுகாதார தூய்மைக்கேட்டில் நாங்கள் அவதியுற்று வருகிறோம். இப்பிரச்னையை தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளர் நிறுவனம் ஏதாவது ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று குடியிருப்பாளர் தமிழ்மாறன் கேட்டுக்கொண்டார்.
இந்த தூய்மைக்கேட்டினால் இப்பகுதியில் உள்ள ஓரிட மக்களின் சுகாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாக குடியிருப்புவாசி டாக்டர் Suraya Ibrahim தெரித்தார்.
குடியிருப்பாளர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் இரு தரப்பினருக்கும் நன்மை அளிக்கக்கூடிய ஒரு திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக மாசுபாடு குடியிருப்பாளர் இல்லங்களை நோக்கி வராமல் இருப்பதற்கு ஒரு பாதுகாப்புத் அரண் திட்டம் வரையப்பட வேண்டும் என்று குடியிருப்பாளர் Kasmidar Singh கேட்டுக்கொண்டார்.
சுகாதாரமற்ற சூழ்நிலையில் கூலிம் உத்தாமா மக்கள் பெரும் அவதியில் உள்ளனர். இக் குடியிருப்பு மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இக்கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் . இதற்கு சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளர் நிறுவனம், கூலிம் உத்தாமா குடியிருப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முன் வர வேண்டும்.
அந்தப் பேச்சுவார்த்தையில் காணப்படக்கூடிய தீர்வுக்கு பிறகே கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் அனைவரும் ஒரு சேர கோரிக்கை விடுத்துள்ளனர்.








