கோலாலம்பூர், ஜனவரி.02-
இராணுவ உயர் அதிகாரி சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் தொடர்புடைய மேலும் பல முக்கிய நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தற்போது அடையாளம் கண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இராணுவ கொள்முதல் டெண்டர்களில் நிகழ்ந்த இந்த முறைகேடுகள் குறித்து கடந்த சில வாரங்களாக தீவிர விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்களை முடக்கும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இந்த ஊழல் வழக்கின் முக்கிய நபர் தற்போது மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அவரிடம் இன்னும் முழுமையான வாக்குமூலம் பெறப்படவில்லை என்றும், அவர் குணமடைந்தவுடன் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. சிக்கலான ஆவணங்களையும் நிதி பரிமாற்றங்களையும் ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால், இந்த பிரம்மாண்ட ஊழல் வேட்டை எத்தனை நபர்களை இரும்புக் கரம் கொண்டு இறுக்கிப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.








