கோலாலம்பூர், செப்டம்பர்.03-
நாட்டு மக்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டுள்ள தலா 100 ரிங்கிட் சாரா பணத்தில் மூன்றாவது நாளில் 75.3 மில்லின் ரிங்கிட் வரை பெறுநர்கள் செலவிட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் சாரா பணத்தில் மூன்றாவது நாளான நேற்று செப்டம்பர் 2 ஆம் தேதி வரை, பொருட்களை வாங்குவதில் 11 லட்சம் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஒரே நாளில் 50 மில்லியன் ரிங்கிட் வரை மக்கள் பொருட்களை வாங்கியுள்ளனர். நேற்று இரவு 10.30 வரை 75.3 மில்லின் ரிங்கிட் மதிப்புள்ள பரிவர்த்தனைகள் நடைபெற்று இருப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மைகாட் அட்டையைப் பயன்படுத்தி, மைகாசே இணைய முறை மூலம் பணப் பட்டுவாடா முறையில் முதல் நாள் ஏற்பட்ட சிக்கலைப் போல் நேற்று ஏற்படவில்லை. நேற்று 95 விழுக்காடு பரிவர்த்தனைகள் சுமூகமாக நடைபெற்றதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








