Jan 19, 2026
Thisaigal NewsYouTube
நாடு முழுவதும் விசாக தின கொண்டாட்டம்
தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் விசாக தின கொண்டாட்டம்

Share:

"துன்பத்திற்கு மூலக்காரணம் ஆசைதான்” எனும் மாபெரும் தத்துவத்தை உலகிற்குப் போதித்த சித்தார்த்த கெளதம புத்தரின் பிறந்த தினமான விசாக தினம், இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கோலாலம்பூர், ஈப்போ, பினாங்கு உட்பட பல மாநிலங்களில் உள்ள புத்த விகாரங்களில் காலையில் சிறப்பு பூசைகள் மற்றும் வழிபாடுகளுடன் விசாக தினம் வரவேற்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான பெளத்த சமயத்தைச் சேர்ந்தவர்களும், புத்த பிக்குகளும், சன்னியாசிகளும், பொது மக்களும் இத்தரணியில் தோன்றிய அந்த மகா ஞானியின் உன்னத விழாவில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.

கோலாலம்பூரில் பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் பெர்ஹாலாவில் உள்ள மஹா விகாரத்திலும், பழைய கிள்ளான் சாலையில் உள்ள புத்தர் ஆலயத்திலும், செந்தூல், ஶ்ரீ லங்கா புத்த விகாரத்திலும் விசாக தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

புத்தரின் சிலைக்கு முன் விளக்குகளை ஏந்தி, மலர்களைத் தூவி மக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். ஆங்காங்கு அமர்ந்திருந்த புத்த பிக்குகள் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் புனித நீர் தெளித்து, கைகளில் ஆசீர்வாதிக்கப்பட்ட கயிற்றை கட்டி, அருளாசி வழங்கினர். ஈப்போ தம்புனில் உள்ள புத்த விகாரத்திலும் விசாக தினம் களைக்கட்டியது.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்