கோலாலம்பூர், ஜூலை.31-
13 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் மக்கள் வாங்கத்தக்க, விலைக் கட்டுப்படியான 10 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
13 ஆவது மலேசியத் திட்டம் அமல்படுத்தப்படும் 2026 ஆம் ஆண்டு முதல் 2030 ஆண்டு வரை 5 ஆண்டு காலக் கட்டத்திற்குள் பத்து லட்சம் விலைக் கட்டுப்படியான வீடுகளைக் கட்டுவதற்கு அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் 13 ஆவது மலேசியத் திட்டத்தைத் தாக்கல் செய்து உரையாற்றுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
மடானி வீடமைப்புத் திட்டம், பொதுச் சேவை ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டம், உதவித் திட்டத்தின் வாயிலாக கட்டப்படும் வீடமைப்புகள், விலைக் கட்டுப்படியான வீடுகள் என்று பல்வேறு பெயர்களில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்த பத்து லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று பிரதமர் விளக்கினார்.








