Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அப்துல் ஹாடி அவாங் குடும்பத்தினர் வருத்தம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அப்துல் ஹாடி அவாங் குடும்பத்தினர் வருத்தம்

கோலாலம்பூர், ஜூன்.18-

பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், தற்போது கோலாலம்பூர் ஐஜேஎன்னில் சிகிச்சை பெற்று வருவது தொடர்பிலான காணொளி ஒன்று, அவரின் குடும்பத்தாரின் அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது குறித்து ஹாடியின் மகன் இன்று வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஸுல்கிஃப்ளி அஹ்மாட் வருகையின் போது இந்தக் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹாடியின் மகன் டாக்டர் முகமட் காலில் தெரிவித்தார்.

தங்கள் குடும்பத்தின் அனுமதியின்றி அந்த வீடியோ பதிவு எவ்வாறு எடுக்கப்பட்டது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →