Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வருமானத் தரவுகளின் அடிப்படையில் உதவி நல்கிவிட வேண்டும்
தற்போதைய செய்திகள்

வருமானத் தரவுகளின் அடிப்படையில் உதவி நல்கிவிட வேண்டும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.23-

அரசாங்கத்தின் ரொக்க நிதி உதவி பெறுகின்றவர்கள் ஆண்டுதோறும் புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு பதிலாக அவர்களின் வருமானத் தரவுகளைச் சரி பார்த்து, ஆண்டுதோறும் உதவி கிடைப்பதற்கு வகை செய்யப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின், அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

ஆண்டுதோறும் சமூக உதவிக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அல்லது அதிகாரத்துவத் தடைகள் அகற்றப்பட வேண்டும். மாறாக, உதவித் தேவைப்படுகின்றவர்களுக்கு அவர்களுக்கான உதவிகள் இயல்பாகவே கிடைக்க வேண்டும் என்று பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான முகைதீன் கேட்டுக் கொண்டார்.

உதவித் தேவைப்படுகின்றவர்களின் தரவுத் தளம் வருமான வரி வாரியத்திலும், நிதி அமைச்சிலும், தேசிய பதிவு இலாகாவிலும் இருக்கும் பட்சத்தில் எதற்காக மக்கள் ஒவ்வொரு முறையும் நிதி கேட்டு விண்ணப்பிக் வேண்டும் என்று அவர் வினவினார்.

இ காசே செயலியைத் திறந்தாலே உதவித் தேவைப்படக்கூடியவர்களின் விவரக் குறிப்புகள் இருக்கும். அதனைச் சரி செய்து, ஒவ்வோர் ஆண்டும் அவர்களுக்கு நிரந்தரமாக உதவி கிடைப்பதற்கு அரசாங்கம் ஆவணம் செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதமராக முகைதீூன் கேட்டுக் கொண்டார்.

Related News