எல்மினா விமான விபத்தில் கொல்லப்பட்ட பத்து பேரின் சடலங்கள் டி.என்.ஏ மரபணு சோதனைக்காக கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வேளையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது சடலம், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் வாரிசுதாரரிடம் இன்று காலை 9.30 மணிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 32 வயதான ஹபீஸ் முஹம்மது சலே என்று அடையாளம் கூறப்பட்ட அந்த நபரின் பிரேதம், அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, கிள்ளான், அல் ரஹிமியா மசூதி பள்ளிவாசலில் நடத்தப்பட்ட பிரார்த்தனைக்குப் பின்னர், நல்லடக்கம் செய்யப்படுவதற்காக கெடா, ஜெரோங் கிராமம், அல்-ஹுதா மசூதி முஸ்லிம் மையத்து கொல்லைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார். பிரேதத்தை கொண்டு செல்லப்படுவதற்கான பயண ஏற்பாடுகளையும் போலீசார் முறைப்படுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு


