Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சண்டை நிறுத்தம் குறித்துப் பரிசீலிக்க கம்போடியா, தாய்லாந்து தயார்: பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

சண்டை நிறுத்தம் குறித்துப் பரிசீலிக்க கம்போடியா, தாய்லாந்து தயார்: பிரதமர் அன்வார்

Share:

கோலாலம்பூர், ஜூலை.25-

கம்போடியாவும் தாய்லாந்தும் சண்டை நிறுத்தம் குறித்துப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கம்போடிய-தாய்லாந்து எல்லைப் பகுதியில் நிலவிய பதற்றம் நேற்று வியாழக்கிழமை பெரிய அளவில் மோசமடைந்தது. இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாய்லாந்து, கம்போடியத் தலைவர்களுடன் தாம் நேரடித் தொடர்பில் இருப்பதாகவும், இரு நாடுகளுக்கு இடையிலான பூசலைக் கட்டுப்படுத்துமாறு அவர்களிடம் தாம் கேட்டுக் கொண்டு உள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.

கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட், தாய்லாந்தின் இடைக்காலப் பிரதமர் பும்தாம் வேசாயாச்சா ஆகிய இருவருடனும் தாம் நேற்று மாலையில் பேசியதாக அன்வார் குறிப்பிட்டார். ஆசியானின் இரு முக்கிய நாடுகளின் எல்லைப் பகுதியில் பதற்ற நிலை மோசமடைந்து வருவது குறித்து மலேசியா மிகுந்த கவலைக் கொண்டுள்ளதை அவர்களிடம் தாம் தெரிவித்ததாக அன்வார் தெரிவித்தார்.

மலேசியா, இவ்வாண்டுக்கான ஆசியான் கூட்டமைப்புத்ப் தலைமைத்துவப் பொறுப்பை வகிக்கும் நாடு என்ற முறையில் இடம் பெற்ற உரையாடல்களில் எதிர்ப்புணர்வு மேலும் மோசமடையாமல் இருக்கவும் அமைதியான பேச்சு வார்த்தை, அரசதந்திர ரீதியாகத் தீர்வு காணுதல் ஆகியவற்றுக்கு வழிவிடவும் உடனடியாகச் சண்டையை நிறுத்துமாறு இரு தலைவர்களிடமும் தாம் நேரடியாகக் கோரிக்கை விடுத்ததாக அன்வார் கூறினார்.

Related News