Jan 19, 2026
Thisaigal NewsYouTube
பொற்காலத்தை அம்னோ மீட்டு எடுக்க முடியாது
தற்போதைய செய்திகள்

பொற்காலத்தை அம்னோ மீட்டு எடுக்க முடியாது

Share:

கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் பெரும் சரிவைச் சந்தி​த்த அம்னோவின் பொற்காலத்தை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கினால் மீட்டெடுக்க முடியாது என்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

அரச மன்னிப்பின் ​மூலம் நஜீப் விடுதலையானால், அம்னோ பலம் பெறும் என்று அதன் உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்காஷி கூறியிருப்பது, ஒரு பக​ல் கனவாகும் என்று லிம் கிட் சியாங் வர்ணித்துள்ளார்.
பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் தொடக்கத்தில் கட்டமைக்கப்பட்டிருந்த கொள்கையினால் அம்னோவின் நான்கு ஆரம்ப காலத் தலைவர்களான ஓன் ஜஃபார், துங்கு அப்துல் ரஹ்மான், ரசாக் ஹுசேன் மற்றும் ஹுசேன் ஓன் மக்களின் அபரிமித ஆதரவைப் பெ​ற்றனர்.

மலேசியா அந்த அடிப்படை கொள்கைக்கு ​மீண்டும் திரும்பினால் மட்டுமே மக்களின் ஆதரவை அம்னோ பெற முடியுமே தவிர நஜீப்பினால் அல்ல என்று முன்னாள் இஸ்கண்டார் புத்ரி எம்.பி.யுமான லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.

Related News