தனது மனைவி மீது பெட்ரோல் ஊற்றி, தீயிட்டு கொன்ற குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனைக்கு பதிலாக 35 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
50 வயதுடைய வி. மதியழகன் என்று அந்த நபர், கடந்த 2017 ஆம் ண்டு மே 26 ஆம் தேதி கெடா, சுங்கை பட்டாணி, தாமானார்கெட்டில் உள்ள வீட்டில் தனது மனைவி 44 வயதுடைய ஆர். ரத்னா மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொன்ற குற்றத்திற்காக அலோர் நீதிமன்றம் அந்நபருக்கு தூக்குத் தண்டனை விதித்தது.
தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மதியழகன் செய்து கொண்ட விண்ணப்பம் அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ ஹடாரியா ஷெட் இஸ்மாயில் தலைமையில் மூவர் கொண்ட நீதிபதிகளால் இன்று விசாரிக்கப்பட்டது.
தூக்குத் தண்டனை விதிப்பு சட்டம் அகற்றப்பட்டு விட்டதால் அத்தண்டனைக்கு பதிலாக 35 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக ஹடாரியா ஷெட் இஸ்மாயில் தெரிவித்தார்.








