கோலாலம்பூர், ஆகஸ்ட்.18-
முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணம் தொடர்பில் ஐந்து மாணவிகள், வரும் புதன்கிழமை சபா, கோத்தா கினபாலு, சிறார் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்.
மாணவி ஸாராவைப் பகடிவதை செய்து, நிந்தித்ததற்காக அந்த ஐந்து மாணவிகள் மீதும் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என்று சட்டத்துறை தலைவர் முகமட் டுசுகி மொக்தார் தெரிவித்தார்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்படவிருக்கும் 5 மாணவிகளும் 18 வயதுக்கும் குறைந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் பொதுவில் நடைபெறாது என்று அவர் விளக்கினார்.
இந்த ஐந்து மாணவிகளும் குற்றஞ்சாட்டப்படுவது மூலம் மாணவி ஸாரா இறப்பு தொடர்பில் நடைபெறவிருக்கும் மரண விசாரணையைப் பாதிக்காது என்பதையும் முகமட் டுசுகி மொக்தார் தெளிவுபடுத்தினார்.








