Oct 17, 2026
Thisaigal NewsYouTube

எஸ்.பி.ஆர்.எம். உதவி ஆணையர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எஸ்.பி.ஆர்.எம். உதவி ஆணையர் மீது குற்றச்சாட்டு

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 6 லட்சத்து 13 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள பொருட்களை சட்டவிரோதமாக பறிமுதல் செய்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். உதவி இயக்குநர் ஒருவர், ஷா ஆலாம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

அஸிஸுன் முகமட் என்ற அந்த எஸ்.பி.ஆர்.எம். உயர் அதிகாரி, ஓப் கிரீன் என்ற நடவடிக்கையின் மூலம் இந்தப் பணத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2019 ஆ ம் ஆண்டு மை சீக்காப் முறையில் டீசல் வாகனங்களின் பதிவு முறை மோசடிகளை வெற்றிகரமாக கண்டறியும் நடவடிக்கையில் மேற்கண்ட மதிப்புள்ள பொருட்களை சட்டவிரோதமாக பறிமுதல் செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த உதவி இயக்குநர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →