வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து, வெற்றி பெற செய்வார்களேயானால் கெடா மற்றும் கிளந்தான் மாநிலங்களைப் போல் சிலங்கூர் மாநிலம் ஆகிவிடும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிலாங்கூர், சிப்பாங்கில் சுமார் 2,000 பேர் கொண்ட சீனப் பெரும்பான்மைக் கூட்டத்தில் பேசிய பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார், சிலாங்கூர் அனைத்து இனங்களுக்கும் சொந்தமானது என்பதைக் காட்ட வாக்காளர்கள் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.
சிலாங்கூர் மாநிலம் அனைத்து இனங்களுக்கும் சொந்தமானது என்பதை பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளுக்கு மக்கள் எடுத்துரைப்பதற்கு இதுவே சிறந்த தருணமாகும் என்று அன்வார் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மக்கள், எதனையும் செவிமடுக்ககூடிய முட்டாள்கள் அல்ல என்பதை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு நிரூபிக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய செய்திகள்
தவறாக வாக்களித்தால் கெடாவைப் போல ஆகிவிடும் சிலாங்கூர் மாநிலம்பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் எச்சரிக்கை
Related News

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

போலீஸ்காரர் உயிரிழந்த விபத்து: 80 வயது மூதாட்டி கைது

மலேசியாவின் AI, 5G மற்றும் டிஜிட்டல் மாற்றத் திட்டங்களை முன்னெடுப்பதில் பீடுநடை போடுகிறார் கோபிந்த் சிங் டியோ


