Jul 31, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் மோதி நெடுஞ்சாலை பணியாளர் மரணம்
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் மோதி நெடுஞ்சாலை பணியாளர் மரணம்

Share:

வடக்கு தெற்கு நெடுஞ்சாலை கிலோ மீட்டர் 63.5 இல் பணியில் இருந்த ஊழியர் ஒருவர் டொரெய்லர் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று அதிகாலை நடந்த இந்தச் சம்பவம் குறித்து தகவல் அளித்த குளுவாங் மாவட்டக் காவல் துறை தலைவர் அசிஸ்டன் கமிஷனர் பஹ்ரின் முகமது நோ தெரிவிக்கயில், உயிரிழந்த 51 வயது கே கிருஷ்ணன் குட்டியின் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டதாகவும் அவரை மோதிய டிரெய்லர் அவ்விடத்தை விட்டு உடனடியாகச் சென்று விட்டதாகவும் கூறினார்.

கே கிருஷ்ணன் குட்டியுடன் இணைந்து வேலை செய்த இன்னொரு ஊழியர் இச்சம்பவத்தை நேரில் பார்த்திருந்தாலும், இருளாக இருந்தமையால் அந்த டிரெய்லரின் பதிவு எண் பட்டையை சரியாகப் பார்க்க முடியவில்லை என்றார்.

Related News