நாட்டில் தற்போது மோசமான நிலையில் உள்ள புகைமூட்டப் பிரச்சினையை எதிர்கொள்ள, அமைச்சுகளுக்கு இடையிலும் பிராந்திய அளவிலும் அரசாங்கம் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோவை தாம் நேரடியாகத் தொடர்பு கொண்டு, நெருக்கடியை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் ஒப்புக் கொண்டதாக அன்வார் கூறினார். இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களும் தங்கள் இந்தோனேசிய சகாக்களுடன் தொடர்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, மழையைத் தூண்டும் வகையில் மேக விதைப்பு நடவடிக்கைகள் கிட்டத்தட்ட தினசரி அதிகரிக்கப்பட்டுள்ளன. மலேசிய விமானப்படை மற்றும் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அன்வார் கூறினார்.








