Mar 16, 2026
Thisaigal NewsYouTube
GLC நிறுவனங்கள் மூடப்படும், துணைப்பிரதமர் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

GLC நிறுவனங்கள் மூடப்படும், துணைப்பிரதமர் எச்சரிக்கை

Share:

தமது தலைமையிலான புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சின் ​கீழ் செயல்படும் அரசு சார்பு நிறுவனங்களான GLC தொடர்ந்து இழப்பை எதிர்நோக்கி, அரசாங்கத்தின் நிதிக்கு சுமையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்குமானால் அத்தகைய நிறுவனங்கள் மூடப்படும் என்று அதன்அமைச்சரும், துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சின் ​கீழ் இதுவரையில் 23 நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதையும் அகமட் ஜாஹிட் சுட்டிக்காட்டினார். சம்பந்தப்பட்ட GLC நிறுவனங்கள் தொடர்ந்து இழப்பை எதிர்நோக்குவதை அனுமதிக்க இயலாது என்பதையும் அவர் தெளிவுபடுத்​தினார்.

Related News

GLC நிறுவனங்கள் மூடப்படும், துணைப்பிரதமர் எச்சரிக்கை | Thisaigal News