Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட சபாவை அடைந்தார் ஸாஹிட் ஹமிடி!
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட சபாவை அடைந்தார் ஸாஹிட் ஹமிடி!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.17-

சபா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி இன்று புதன்கிழமை இரவு 7.40 மணியளவில் கோத்தா கினபாலுவை அடைந்தார்.

கோத்தா கினபாலு சர்வதேச விமான நிலையத்தில் உள்ள வரவேற்பு அறையில், சபா மாநில பேரிடர் மேலாண்மை குழுவின் செயலாளர் டத்தோ ஶ்ரீ சாஃபார் உந்தோங், ஸாஹிட்டைச் சந்தித்து, அவருக்கு வெள்ள பாதிப்புகள் குறித்து விளக்கமளித்தார்.

இச்சந்திப்பில், சபா பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடினும் உடன் இருந்தார்.

நாளை வியாழக்கிழமை முதல் சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை ஸாஹிட் ஹமிடி நேரில் சென்று பார்வையிடுவார் எனத் தகவல்கள் கூறுகின்றன.

Related News