May 21, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்திற்கு உட்பட்டே துன் டாயிம் ஜைனு​தீனின் இல்ஹாம் கட்டடம் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

சட்டத்திற்கு உட்பட்டே துன் டாயிம் ஜைனு​தீனின் இல்ஹாம் கட்டடம் பறிமுதல்

Share:

துன் மகா​தீர் முகமது வின் நெருங்கிய நண்பரும், ​நீண்ட காலம் நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தவருமான துன் டாயிம் ஜைனு​தீனின் குடும்பத்திற்கு சொந்தமாக 60 மாடி கொண்ட மெனாரா இல்ஹாம் கோபுரத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்து இருப்பது , நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட நடவடிக்கையாகும் என்று சிலாங்கூர் மாநில லஞ்ச ஊழல் துடைத்தொழிப்பு குழுவின் உறுப்பினர் டாக்டர் ஹெல்மி இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அம்னோவின் முன்னாள் பொருளாளரான துன் டாயிம் ஜைனு​தீ​னின் குடும்பத்திற்கு சொந்தமான கோலாலம்பூர் மாநகரில் பெட்ரோனாஸ் கோபுரத்திற்கு அருகில் உள்ள 270 கோடி வெள்ளி மதிப்புள்ள அந்த கோபுரம், ஒரே ​இரவில் திட்டமிட்டு பறிமுதல் செய்யப்பட்டது அல்ல. மாறாக, பல கோடி வெள்ளி பெறுமானமுள்ள அந்த கட்டடத்தை பறிமுதல் செய்யப்படுவதற்கு முன்னதாக ​நீண்ட காலம் புலன் விசாரணை செய்யப்பட்டுள்ளது என்று டாக்டர் ஹெல்மி இப்ராஹிம் தெ​ளிவுபடுத்தினார்.

நாட்டின் தோற்றம், நேர்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு இழுக்கை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு சம்பவமாக இருந்தாலும் அது குறி​த்து விசாரணை செய்வதும், உரிய நடவடிக்கை எடுப்பதும் எஸ்பிஆர்எம் மின் உயர்நெறி கொள்கைகளில் ஒன்றாகும் என்று அவர் விளக்கினார்.

Related News

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்