Oct 12, 2026
Thisaigal NewsYouTube

கார் வங்கிக்குள் நுழைந்தது, வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கார் வங்கிக்குள் நுழைந்தது, வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

தஞ்சோங் காராங், ஏப்ரல்.12-

வாகனம் ஒன்று, திடீரென்று கண்ணாடியை உடைத்துக் கொண்டு, வங்கிக்குள் பாய்ந்ததைக் கண்டு வாடிக்கையாளர்கள் பீதியில் மூழ்கினர்.

இந்த சம்பவம் நேற்று இரவு 8.50 மணியளவில் தஞ்சோங் காராங் பட்டணத்தில் நிகழ்ந்ததாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஸாஹாருடின் தஜுடின் தெரிவித்தார்.

எனினும் இச்சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

வங்கியின் முன், உள்ள கார் நிறுத்தும் இடத்தில் தனது டொயோட்டா இன்னோவா ரகக் காரை நிறுத்த ஆடவர் முயற்சி செய்துள்ளார். எனினும் தவறுதலாக எண்ணெய் பெடலை அழுத்தி விட்டதால், அந்த வாகனம், மின்னல் வேகத்தில் வங்கியை நோக்கி பாய்ந்ததாக அவர் குறிப்பிட்டார்

இதில் 37 வயதுடைய அந்த எம்பிவி வாகனத்தின் ஓட்டுநர் சொற்பக் காயங்களுக்கு ஆளானார். அவர் தஞ்சோங் காராங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக அஸாஹாருடின் தஜுடின் தெரிவித்தார்.

இச்சம்பவம் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →