கோத்தா கினபாலு, நவம்பர்.17-
சபா மாநிலத்தில் பெறப்படும் வருவாயில் 40 விழுக்காடுத் தொகையை அந்த மாநிலத்திற்கே மத்திய அரசாங்கம் திருப்பித் தர வேண்டும் என்ற கோத்தா கினபாலு நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயலாக்கம் குறித்து விவாதிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.
1963 ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்த ஷரத்துக்கு ஏற்ப 40 விழுக்காட்டுத் தொகையை வழங்குவது தொடர்பில் விவாதிக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக அந்தக் குழுவின் தொழில்நுட்பக் குழுவின் தலைவரான ஃபடில்லா யூசோஃப் குறிப்பிட்டார்.
இந்தச் சிறப்புக் குழுவில் விவாதிக்கக்கூடிய விவகாரங்கள் நேரடியாக அமைச்சரவையில் தெரிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இன்று கோத்தா கினபாலுவில் 40 விழுக்காடு வருவாய் தொடர்பான சிறப்புக்குழு கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.








