நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கோவிட் 19 தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 5.8 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் ரட்ஸி அபு ஹசான் தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிட் 19 நோயளிகளின் எண்ணிக்கை 4.8 சதவிகிதாமாக இருந்த நிலையில் ஏப்ரல் மாதம் அது 5.8 ஆக உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் பொது இடங்களில் முககவசம் அணிவதுடன் தங்களைப் பாதுகாத்து கொள்ளும் சுய நடவடிக்கை எடுத்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.








