Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஐ - தெக்காட் வாயிலான நிதி உதவி
தற்போதைய செய்திகள்

ஐ - தெக்காட் வாயிலான நிதி உதவி

Share:

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு , குறிப்பாக பி40 குழுமத்திற்கு உதவும் ஐ - தெக்காட் சமூக நிதித் திட்டத்திற்கு மானிய ஒதுக்கீட்டை அரசாங்கம் 60 லட்சம் வெள்ளியாக உயர்த்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

2023 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 40 லட்சம் வெள்ளியிலிருந்து இந்த ஆண்டுக்கான ஐ-தெக்காட்டின் மொத்த உதவி தொகை ஒரு கோடி வெள்ளியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
தேசிய வறுமையை ஒழிக்கவும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.
ஐ-தெக்காட் என்பது பேங்க் நெகாரா மலேசியாவால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

Related News