Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்து அகற்றியுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்து அகற்றியுள்ளது

டிச. 22-

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் - DBKL, பொது வழிகளைத் தொந்தரவு செய்கிற வகையில் விற்பனையாளர்களின் வணிகப் பொருட்களை தலைநகரின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்து அகற்றியுள்ளது. இந்த நடவடிக்கை, பொதுமக்களின் புகார்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவும், பொது இடங்களின் ஒழுங்கையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கத்தோடும் மேற்கொள்ளப்பட்டது.

Jalan Tun Sambanthan, Jalan Thambipillay, Jalan Sultan Abdul Samad, Jalan Tuanku Abdul Rahman , Chow Kit Monorail நிலையம் அருகே Jalan Sultan Azlan Shah ஆகிய பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 1974 ஆம் ஆண்டு சாலை வடிகால் கட்டடச் சட்டத்தின் படி இந்த பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது என இன்று முகநூலில் வெளியிடப்பட்ட அறிக்கையில் DBKL குறிப்பிட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் நாற்காலிகள், பிளாஸ்டிக் மேசைகள் , பொது இடங்களில் வைக்கப்பட்ட பிற கருவிகள் ஆகியன அடங்கும். இந்த பொருட்கள் ஆவணப்படுத்தலுக்காக DBKL பறிமுதல் கிடங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

வணிகர்களும் விற்பனையாளர்களும் சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் இணங்க வேண்டும் என்று DBKL வலியுறுத்தியுள்ளது. மேலும், பொதுமக்களின் நலனுக்காக தொடர்ந்து கண்காணிப்பும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும், புகார்களை இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேபிள் திருட்டு முயற்சி: காஜாங் எம்ஆர்டி ரயில் சேவையில் பாதிப்பு

கேபிள் திருட்டு முயற்சி: காஜாங் எம்ஆர்டி ரயில் சேவையில் பாதிப்பு

பெண் சுங்கத் துறை அதிகாரி மரணம் - கணவர் போலீசில் சரண்

பெண் சுங்கத் துறை அதிகாரி மரணம் - கணவர் போலீசில் சரண்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை