Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அந்த ஆடவருக்கு எதிராக விசாரணை அறிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்த ஆடவருக்கு எதிராக விசாரணை அறிக்கை

பெட்டாலிங்ஜெயா, டிச.11-


எண்ணெய் நிலையம் ஒன்றில் புகைப்பிடித்தாக கூறப்படும் ஆடவரை பொது மக்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்த ஆடவர், மற்ற வாகனங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் காரை மிக அபாயகரமான செலுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கை திறந்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை காலை 8 மணியளவில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த காணொளியை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சூப்ரிண்ட். எம். ஹுசேன் சோலேஹுடின் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →