Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பொது மக்களின் உதவியை நாடியுள்ளது போலீஸ்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பொது மக்களின் உதவியை நாடியுள்ளது போலீஸ்

ஈப்போ, நவ. 26-


இன்று செவ்வாய்க்கிழமை காலையில் ஈப்போ, ஜாலான் பெண்டாஹராவில் உள்ள ஒரு பொற்கொல்லர் நகைக்கடை வளாகத்தின் முன், அதன் உரிமையாளிரிடமிருந்து மூன்று கிலோ தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஆயுதமேந்திய முகமூடி கொள்ளையர்களை பிடிப்பதற்கு போலீசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

காலை 9.30 மணிக்கு 50 வயது மதிக்கத்தக்க கடை உரிமையாளர், தங்க ஆபரணஙகளை தனது வாகனத்திற்கு வைப்பதற்கு முற்பட்ட வேளையில் இக்கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இரு கார்களில் வந்த 6 கொள்ளையர்கள், மின்னல் வேகத்தில் அந்த தங்க ஆபரணங்களை பறித்துக்கொண்டு தப்பியதை நேரில் பார்த்த சாட்சிகள் யாராவது இருப்பார்களேயானால் , போலீசாருக்கு தகவல் தந்து உதவிட வேண்டும் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சுல்கப்லி சாரியாட் கேட்டுக்கொண்டர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →