Sep 26, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் நிழல் அமைச்சரவை போஸ்டர் ஒரு வதந்தி
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் நிழல் அமைச்சரவை போஸ்டர் ஒரு வதந்தி

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் காலியாக உள்ள நான்கு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இடங்களுக்கு, புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் 'நிழல் அமைச்சரவை' போஸ்டர் முற்றிலும் உண்மையல்ல என்று மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இது குறித்து முகநூலில் பதிவிட்டுள்ள மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண், இனவாத உணர்வுகளைத் தூண்டி, மாநிலத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் நோக்கில் பொறுப்பற்ற நபர்களால் இந்த போஸ்டர் பரப்பப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் இதுபோன்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களைச் சரிபார்த்து விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் நிழல் அமைச்சரவை போஸ்டர் ஒரு வதந்தி | Thisaigal News