Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மொழிக்காப்பகத்தின் நிறைவு விழா, பள்ளி அளவில் கொண்டாடப்படும்
தற்போதைய செய்திகள்

மொழிக்காப்பகத்தின் நிறைவு விழா, பள்ளி அளவில் கொண்டாடப்படும்

Share:

நாட்டின் மொழிக்காப்பகமான டேவான் பஹாசா டான் புஸ்தாக்காவின் 67 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம், அடுத்த ஆண்டு முதல் பள்ளி அளவில் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிபிபி எனப்படும் டேவான் பஹாசா டான் புஸ்தாக்காவுடன் கல்வி அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

பள்ளி அளவில் மொழியை வளப்படுத்தும் முயற்சிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபட்லினா சிடெக் தெரிவித்தார். மலாய் மொழி வளர்ச்சியில் அக்கறையும், கடப்பாடும் கொண்டு, மலாய் மொழியின் பயன்பாடு தரமாக இருப்பதை உறுதி செய்து வரும் டேவான் பஹாசா டான் புஸ்தாக்காவின் 67 ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வை கோலாலம்பூரில் உள்ள விஸ்மா டிபிபி யில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஃபட்லினா சிடெக் இதனை தெரிவித்தார்.

Related News