Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கோலாலம்பூரில் மாபெரும் Fashion with Starz 1.0 பேஷன் ஷோ போட்டி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோலாலம்பூரில் மாபெரும் Fashion with Starz 1.0 பேஷன் ஷோ போட்டி

வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி கோலாலம்பூர், பண்டார் வவாசன் , 1018, ஜாலான் சுல்தான் இஸ்மாயில், குயில் சிட்டி மால் கோலாலம்பூர் பேரங்காடியில் Fashion with Starz 1.0 எனும் புடவைத்துணியை அடிப்படையாக கொண்ட மாபெரும் ஆடை அலங்கார பேஷன் ஷோ போட்டி நடைபெறவிருக்கிறது.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவிக்கும் Fashion with Starz 1.0 போட்டியை Shining Starz நிறுவனம் மிக பிரமாண்டபமாக ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியர்களின் பாரம்பரிய புடவையான சேலைத்துணியை அடிப்படையாக கொண்டு, அதன் வாயிலாக வடிவமைக்கப்படும் பலதரப்பட்ட ஆடைகளில் ஒய்யாரமாக பவனி வரும் இந்த பேஷன் ஷோ போட்டி, இரண்டு பிரிவுகளாக நடத்தப்படவிருக்கின்றன..

18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு மற்றும் 6 க்கும் 15 க்கும் இடைப்பட்ட வயதுடைய சிறார்களுக்கு என இரண்டு பிரிகளாக நடத்தப்படவிருக்கின்றன.

போட்டியில் பங்கேற்பதற்கு பெரியவர்களுக்கு தலா 130 வெள்ளியும், சிறார்களுக்கு தலா 60 வெள்ளியும் நுழைவுக்கட்டணமாக விதிக்கப்படுகிறது. அனைத்து இன மலேசியர்களுக்கும் இப்போட்டி திறந்து விடப்பட்டுள்ளது.

மேல்விபரங்கள் மற்றும் பதிவிற்கு:

Screen

For enquries / registration: +6016 425 2867 ( Strictly DM only )

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →