May 7, 2026
Thisaigal NewsYouTube
அக்டோபர் 1 முதல் புக்கிட் சாகார் சிஐகியூ செயல்பாட்டிற்கு வரும்
தற்போதைய செய்திகள்

அக்டோபர் 1 முதல் புக்கிட் சாகார் சிஐகியூ செயல்பாட்டிற்கு வரும்

Share:

புத்ராஜெயா, பிப்ரவரி.03-

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை, புக்கிட் ஸாஆற் ஒருங்கிணைந்த குடிநுழைவு, சுங்கவரி மற்றும் தனிமைப்படுத்தல் CIQ வளாகத்தில் இந்த ஆண்டு தனது செயல்பாடுகளைத் தொடங்க உள்ளது.

இது குறித்து கருத்துரைத்த அதன் தலைமை இயக்குநர் Datuk Seri Mohd Shuhaily Mohd Zain , இந்த CIQ வளாகம் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முழுமையாகச் செயல்படும் என்றும், நாளொன்றுக்கு சுமார் 10,000 பயணிகள் வரை கையாளும் திறன் கொண்டது என்றும் தெரிவித்தார்.

இந்த நுழைவாயில் புக்கிட் சாகார் முதல் உட்லண்ட்ஸ் வரை சுமார் 4 முதல் 5 கிலோமீட்டர் வரையிலான RTS எனும் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பு இரயில் பாதையை உள்ளடக்கியது. சிங்கப்பூர் மற்றும் புக்கிட் சாகார் ஆகிய இரு பகுதிகளிலும் குடிநுழைவுச் செயல்பாடுகள் இருக்கும்.

அதே போல் சிங்கப்பூர் அதிகாரிகளும் தங்கள் தரப்பில் பணிகளை மேற்கொள்வர். இது ஜோகூர் பாலம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் ஒரு முயற்சியாகும் என்று Mohd Shuhaily கூறினார்.

Related News

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினர் 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினர் 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர்

நெகிரி செம்பிலானில் எந்த நேரத்திலும் தீடீர் தேர்தல் அறிவிக்கப்படலாம் / தயாராக இருக்குமாறு ஆதரவாளர்களுக்கு மந்திரி பெசார் அமினுடின் வேண்டுகோள்

நெகிரி செம்பிலானில் எந்த நேரத்திலும் தீடீர் தேர்தல் அறிவிக்கப்படலாம் / தயாராக இருக்குமாறு ஆதரவாளர்களுக்கு மந்திரி பெசார் அமினுடின் வேண்டுகோள்

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகின்றதா? - மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் காசி மறுப்பு

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகின்றதா? - மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் காசி மறுப்பு

சாஹிட் தொடர்பான டிஎன்ஏஏ விவகாரம்: வழக்கறிஞர் மன்றத்திற்கு சாதகமாக அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு

சாஹிட் தொடர்பான டிஎன்ஏஏ விவகாரம்: வழக்கறிஞர் மன்றத்திற்கு சாதகமாக அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு

மலாக்கா சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை: 5 பிக்பாக்கெட் திருடர்கள் கைது

மலாக்கா சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை: 5 பிக்பாக்கெட் திருடர்கள் கைது

மாமன்னரின் ரஷ்ய பயணம்: 'விக்டரி டே' கொண்டாட்டங்களில் பங்கேற்க மாஸ்கோ சென்றடைந்தார்

மாமன்னரின் ரஷ்ய பயணம்: 'விக்டரி டே' கொண்டாட்டங்களில் பங்கேற்க மாஸ்கோ சென்றடைந்தார்