Oct 9, 2026
Thisaigal NewsYouTube

அந்த பாகிஸ்தான் ஆடவரின் அடையாள கார்டு பறிமுதல் செய்யப்பட்டு விட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்த பாகிஸ்தான் ஆடவரின் அடையாள கார்டு பறிமுதல் செய்யப்பட்டு விட்டது

புத்ராஜெயா, ஜூன்.25-

சபாவில் பாகிஸ்தான் ஆடவர் ஒருவர் நீல நிற அடையாளக் கார்டைப் பெற்றதாகச் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி, 2019 ஆம் ஆண்டில் பகிரப்பட்ட அதே காணொளியே என்று தேசிய பதிவு இலாகா தெரிவித்துள்ளது.

முகமட் இஸாஸ் என்ற அந்த நபர், பிறருக்குச் சொந்தமான பிறப்புப் பத்திரத்தைப் பயன்படுத்தி, நீல அடையாள கார்டைப் பெற்றுள்ளார்.

அந்த அடையாள கார்டு பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. அந்த நபருக்கு எதிராக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் நடவடிக்கை எடுத்து விட்டார் என்று தேசிய பதிவு இலாகா விளக்கம் அளித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →