கோலாலம்பூர், ஆகஸ்ட்.24-
கோலாலம்பூர் மருத்துவமனையின் ஓர்த்தோபேடிக் எனப்படும் எலும்பியல் பிரிவில் நோயாளிகள் ஆறு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருப்பதற்கு, 62 விழுக்காடு மருத்துவ அதிகாரிகள் பற்றாக்குறையே முக்கியக் காரணம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நிரந்தரப் பணி கிடைப்பது, மேலதிகப் படிப்பு, அல்லது பணி விலகல் போன்ற காரணங்களால் பணியிடங்கள் நிரப்பப்படாமல் போனதே இந்தப் பற்றாக்குறைக்குக் காரணம். இதனால் ஒரு நாளைக்கு 150 முதல் 300 நோயாளிகளுக்கு, ஐந்து மருத்துவ அதிகாரிகளும் ஏழு சிறப்பு மருத்துவர்களாலும் மட்டுமே சிகிச்சை அளிக்க முடிகிறது என விளக்கம் கொடுத்துள்ளது சுகாதார அமைச்சு.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, மைசெஜாத்தெரா செயலியில் முன்பதிவு முறையை மருத்துவமனை விரைவில் விரிவுபடுத்தும் என்று அமைச்சு கூறியுள்ளது.








