Oct 16, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு செல்ல தடை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு செல்ல தடை

டிச.10-

இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தனிநபர்கள் மற்றும் நிறுவன இயக்குநர்கள் வெளிநாடுகள் செல்வதற்கு வருமான வாரியம் பயணத்தடையை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.

வருமான வரியை செலுத்தாதது, வருமான வரியை நிலுவையில் வைத்திருப்பது உட்பட வருமான வரி தொடர்புடைய பல்வேறு குற்றங்களுக்காக கடந்த நவம்பர் மாதம் வரையில் 2 லட்சத்து மூவாயிரத்து 123 பேருக்கு இந்தப் பயணத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வருமான வரி வாரியம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வருமான வரி செலுத்தத் தவறியவர்கள், வெளிநாடுகளுக்கு செல்ல பயணத் தடை விதிக்கப்படுவது என்பது வருமான வரி வாரியம் எடுக்கக்கூடிய ஆகக்கடைசி நடவடிக்கையாகும் என்று அது தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →