Dec 22, 2025
Thisaigal NewsYouTube
பையில் பெண்ணின் சடலம்: பணத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம்
தற்போதைய செய்திகள்

பையில் பெண்ணின் சடலம்: பணத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம்

Share:

சிரம்பான், டிசம்பர்.22-

நெகிரி செம்பிலான், பெடாஸ் (Pedas) பகுதியில் ஒரு பாழடைந்த வீட்டின் பின்புறம், பையினுள் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், பணத் தகராறு காரணமாக அப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 51 வயது ஆடவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பணத் தகராறு காரணமாக, அப்பெண்ணின் அம்பாங் வீட்டில், தனக்கு அவருக்கும் வாக்குவாதம் நடந்ததாகத் தெரிவித்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்பெண்ணை, அந்த ஆடவர், கழுத்தை நெரித்துள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில துணை போலீஸ் தலைவர் முகமட் இட்ஸாம் ஜாஃபார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபரான அந்த ஆடவரை, கடந்த வெள்ளிக்கிழமை பகாங் மாநிலம் கெந்திங் செம்பாவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக மலாக்காவில் மேலும் ஒரு ஆடவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் முகமட் இட்ஸாம் ஜாஃபார் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணை நடைபெற்று வருகின்றது.

Related News