மக்களின் கவன ஈர்ப்பு நடவடிக்கையாக நாளை ஞாயிற்றுக்கிழமை கோலகுபு பாருவில் மாபெரும் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெறவிருக்கிறது. இந்த மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதியில் மூடா கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் சிவபிரகாஷ் ஏற்பாடு செய்துள்ளார்.
இளையோர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள், பொருளியல் சிற்றுலாத் தளமாக கோலகுபு பாருவை உருவாக்குதல், உயர் கல்வி வாய்ப்புகள் என இளையோர்களுக்காக பல்வேறு ஊக்குவிப்புத்திட்டங்களை தமது தேர்தல் கொள்கை அறிக்கையில் வரைந்துள்ள சிலாங்கூர் மாநில மூடா கட்சியின் துணைத் தலைவரான டாக்டர் சிவபிரகாஷ், இந்த மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் கோலகுபுபாரு தொகுதி குறித்து தங்களின் எண்ண அலைகளையும், அத் தொகுதி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் டிக் டாக்கில் பதிவேற்றம் செய்து, சிறப்பான உள்ளடக்கத்திற்கு மூன்று பரிசுகளை டாக்டர் சிவபிரகாஷ் வழங்கவிருக்கிறார்.
மோட்டார் சைக்கிள்களுக்கான தரமான தலைக்கவசமான ஏ.ஆர்.சி க்ஷ்.ஆர் கோய் முதல் பரிசாகவும், ZEUS 609 இரண்டாது பரிசாகவும், எஸ்.ஜி.வி மூன்றாவது பரிசாகவும் வழங்கப்படவிருக்கிறது. மூடா கட்சியின் தேசியத் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் மற்றும் டாக்டர் சிவபிரகாஷினால் நாளை ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பத்தாங் காலி ஷெல் எண்ணெய் நிலையத்தில் வோய் முடா ஹுலு சிலாங்கூர் என்ற இந்த மோட்டார் சைக்கிள் ஊர்வலம் தொடக்கி வைக்கப்படவிருக்கிறது. இந்த ஊர்வலம் பத்தாங் காலி ஷெல் நிலையத்தில் தொடங்கி, ராசா, கெர்லிங் மற்றும் பெக்கான் கோலகுபு பாரு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த ஊர்வலத்தில் பங்கேற்க அதிகமானோர் வரவேற்கப்படுகின்றனர்.

Related News

கேஎல்ஐஏ சட்டவிரோத வாடகை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை: வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஜேபிஜே அதிரடி அறிவிப்பு

கோலாலம்பூரில் காடுகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் சட்டவிரோதக் குடியேறிகளின் ரகசியக் குடியிருப்புகள்: 2,177 பேர் கைது

முதலாம் ஆண்டிற்கு முன்கூட்டியே சேர்த்தல் ‘பரிசோதனை எலி’ ஆவதற்காக அல்ல

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்


