போர்ட்டிக்சன், ஆகஸ்ட்.03-
சிலாங்கூரில் உள்ள ஒரு சீனப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி, மலேசிய தேசியக் கொடி - ஜாலூர் கெமிலாங் தலைகீழாகப் பறக்கவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரும் தவறு நடந்து விட்டதாக ஒப்புக் கொண்ட அப்பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி வாரியமும், தங்கள் அலட்சியத்தால் நடந்த இந்தச் செயலுக்கு மலேசிய மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளன.
தேசிய மாதக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கொடி ஏற்றப்பட்டதாகவும், ஒரு பணியாளரின் கவனக்குறைவால் இந்தத் தவறு நிகழ்ந்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இனி இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்வோம் என அப்பள்ளி நிர்வாகம் உறுதிப்படத் தெரிவித்துள்ளது.








