Sep 27, 2026
Thisaigal NewsYouTube
மெர்லிமாவ் போலீஸ் நிலையம் குறித்து AI மூலம் போலி வீடியோ: இளம்பெண் மீது போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

மெர்லிமாவ் போலீஸ் நிலையம் குறித்து AI மூலம் போலி வீடியோ: இளம்பெண் மீது போலீஸ் விசாரணை

Share:

ஜாசின் மாவட்டத்தின் மெர்லிமாவ் போலீஸ் நிலையத்தின் முன்பாக, இரண்டு ஆண் போலீஸ் திகாரிகள் ஒரு பெண்ணை விலங்கிட்டு அழைத்துச் செல்வது போன்ற ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

'Najie@atynjiehah' என்ற டிக்டாக் கணக்கில் பதிவேற்றப்பட்ட இந்தக் காணொளி, உண்மையில் அங்கு நடந்த ஒரு சம்பவம் அல்ல என்பதும், செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தவறாக உருவாக்கப்பட்டது என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் காணொளியானது, அரச மலேசிய போலீஸ் படை மற்றும் மெர்லிமாவ் போலீஸ் நிலையத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதால், சம்பந்தப்பட்ட டிக்டாக் கணக்கு உரிமையாளர் மீது ஜாசின் மாவட்ட போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்திப் போலிச் செய்திகளைப் பரப்புபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்