கோத்தா திங்கி, நவம்பர்.11-
சாலையில் திடீரென்று கடந்த விலங்கினத்தை மோதுவதிலிருந்து தவிர்க்க முயற்சி செய்த காரோட்டி ஒருவர், சாலையோரத்தில் புற்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த மாதுவை மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.37 மணியளவில் ஜோகூர், ஜாலான் ரெங்கிட் - கோத்தா திங்கி சாலையின் 52.5 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது. இதில் புல் வெட்டும் பணியாளரான மியன்மார் நாட்டைச் சேர்ந்த 30 வயது மாது தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார்.
புரோட்டோன் வீரா காரைச் செலுத்திய 30 வயது ஆடவர், கைமுறிந்து, கோத்தா திங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் யுசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.








