ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.24-
இன்று அதிகாலை, ஜோகூர் மாநிலம் செகாமட் நகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1-ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஜோகூர் மட்டுமின்றி, மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங் ஆகிய மாநிலங்களிலும் லேசான அதிர்வுகள் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மேட்மலேசியா தெரிவித்தது.
இதுவரை உயிர்ச் சேதமோ, பெரிய அளவிலான பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், பொதுமக்கள் பாதுகாப்பற்றக் கட்டடங்களில் இருந்து விலகியிருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் ஜோகூர் மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.








