Mar 24, 2026
Thisaigal NewsYouTube
Live Stream- நேரலையில் / அடாவடித்தனம் புரியும் நபர்கள் / அடையாளம் காணப்படுவர்
தற்போதைய செய்திகள்

Live Stream- நேரலையில் / அடாவடித்தனம் புரியும் நபர்கள் / அடையாளம் காணப்படுவர்

Share:

புத்ராஜெயா, ஜூலை 18-

சமூக வலைத்தளத்தில் Live Stream- நேரலையில் மற்றவர்களின் மனதை புண்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டு, தொந்தரவை ஏற்படுத்தும் அடாவடித்தன பேர்வழிகளை அடையாளம் காணவும், / அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சமூக வலைத்தளங்களின் ஒத்துழைப்புடன் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமும் / போலீஸ் துறையும் இணைந்து செயல்படவிருக்கின்றன என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மற்றவர்களின் மனதை நோகடிக்கக்கூடிய கருத்துக்களை, தங்கள் விருப்பம் போல் சமூக வலைத்தளங்களில் அள்ளித் தெளித்து வரும் பயனர்களின் அடாவடித்செயல்களை ஒடுக்க முடியும் என்று அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் இன்று மக்களவையில் குறிப்பிட்டார்.

Live Stream- நேரலையில் மனம் போன போக்கில் தாங்கள் பதிவேற்றம் செய்யக்கூடிய கருத்துகள் இயல்பாகவே அழிந்து விடும் என்று சிலர் கருதி வருகின்றனர். ஆனால், அது உண்மை அல்ல என்று பேரிக்காதான் நசியனால்- லின் பாசிர் மாஸ் எம்.பி. அகமது ஃபத்லி ஷாரி - யின் கேள்விக்கு பதில் ஃபஹ்மி ஃபாட்சில் இதனை தெரிவித்தார்.

அண்மையில் டிக் டாக் பிரபலம் A. ராஜேஸ்வரி என்ற ஈஷா என்பவர் பகடிவதைக்கு ஆளாகி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்திற்கு பின்னர் சமூக வலைத்தளங்களில் மேலோங்கி வரும் இணைய பகடிவதையை தடுக்க அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்ற அகமது ஃபத்லி – எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் இதனை விளக்கினார்.

Related News

Live Stream- நேரலையில் / அடாவடித்தனம் புரியும் நபர்கள் / ... | Thisaigal News