தம்முடைய ஓராண்டு ஒற்றுமை அரசாங்கத்தில் தமது தலைமையிலான அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சரும் லஞ்ச ஊழலில் சம்பந்தப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமது ஓராண்டு நிர்வாகத்தில் தாம் மனநிறைவு கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
தமது அமைச்சர்கள் யாராவது லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசாங்க ஏஜென்சிகளிடம் சோதனை செய்தப் பின்னரே இதனை தாம் அறிவிப்பதாக பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவருமான அன்வார் தெரிவித்துள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், மலேசிய போலீஸ் படை மற்றும் இன்னும் சில அமலாக்கத்தரப்பினரிடமிருந்து தாம் பெற்றுள்ள அறிக்கையின் அடிப்படையில் இவ்விவரத்தை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டார்.








