Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மனைவிக்கு மரணம் விளைவித்த கணவருக்கு 20 ஆண்டு சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மனைவிக்கு மரணம் விளைவித்த கணவருக்கு 20 ஆண்டு சிறை

சண்டாகான், ஜூன்.26-

தனது 6 மாத கர்ப்பிணி மனைவிக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு சண்டாகான் உயர் நீதிமன்றம் இன்று 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

38 வயது முகமட் ருஸ்டி முகமட் நோர் என்ற அந்த நபர், தனது மனைவிக்கு மரணம் விளைவித்துள்ளார் என்பதற்குப் போதுமான ஆதாரங்களை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு வெற்றி கண்டுள்ளது என்று உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ கெலஸ்தீனா ஸ்துவேல் காலிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி சண்டக்கான், ஜாலான் உத்தாராவில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் ஒரு மருத்துவரான 36 வயது டாக்டர் அஸ்மா அப்துல் ராஜாப்பிற்கு மரணம் விளைவித்ததாக அந்த நபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஒரு மருத்துவரான தனது மனைவி 6 மாத கர்ப்பிணி என்று தெரிந்திருந்தும், அவருடன் வெறித்தனமான உடலுறவில் ஈடுபட்டு, அந்தப் பெண்ணுக்கு மூச்சடைப்பை ஏற்படுத்தியதாக அந்நபருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மனைவிக்கு மரணம் விளைவித்த கணவருக்கு 20 ஆண்டு சிறை | Thisaigal News