Jul 2, 2026
Thisaigal NewsYouTube
புத்ராஜெயா தலைமையகத்தில் புதிய எஸ்.பி.ஆர்.எம் தலைவர் பொறுப்பேற்பு
தற்போதைய செய்திகள்

புத்ராஜெயா தலைமையகத்தில் புதிய எஸ்.பி.ஆர்.எம் தலைவர் பொறுப்பேற்பு

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் புதிய தலைமை ஆணையராக டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான்,அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

டான் ஸ்ரீ அசாம் பாக்கிக்கு பதிலாக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான நியமனக் கடிதத்தை அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் கடந்த ஏப்ரல் 25 அன்று வழங்கியிருந்தார். மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் ஒப்புதலுடன், 2009 எஸ்.பி.ஆர்.எம் சட்டத்தின் பிரிவு 5 ன் கீழ் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.

டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான், இன்று மே 13 ஆம் தேதி முதல் 2028 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி வரை இரண்டு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவார். நாட்டின் நேர்மைத்தன்மை, நல்லாட்சி மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த இவரின் தலைமை உதவும் என எஸ்.பி.ஆர்.எம் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு