Feb 27, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்தேனா?  முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிமின் துணைவியார் மறுப்பு
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்தேனா? முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிமின் துணைவியார் மறுப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.27-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்குத் தாம் சதி செய்ததாகக் கூறப்படுவதை மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் ஸைனுடினின் மனைவி நாயிமா அப்துல் காலிட் வன்மையாக மறுத்துள்ளார்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தைச் சீர்குலைக்கவோ அல்லது கவிழ்க்கவோ தான் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை என்றும், அத்தகைய எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தாம் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயல்வதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று நாயிமா குறிப்பிட்டார்.

முன்பு தன்னிடம் 'பெரிய எண்ணிக்கையிலான எம்.பி.க்களின் ஆதரவு' இருப்பதாகக் கூறி ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற பிரதமரின் பழைய குற்றச்சாட்டுகளையே இது நினைவுபடுத்துகிறது" என்று அவர் விமர்சித்துள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தொடர்பான புளூம்பெர்க் அறிக்கையின் பின்னணியில் தாம் இருப்பதாகக் கூறப்படுவதை நாயிமா மறுத்தார். அத்தகைய துணிச்சலான செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதித் திட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஒருவரின் மனைவிக்குத் தொடர்பிருப்பதாகக் கூறி போலீஸ் துறை தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. இன்று வெளியான இந்தச் செய்தி குறித்துத் தனது எதிர்வினையைத் தெரிவிக்கும் போது, நாயிமா மேற்கண்டவாறு கூறினார்.

முன்னதாக, நாட்டின் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "செல்வாக்கு மிக்க ஒரு நபர்" சர்வதேச ஊடகத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்வதாகப் புகார் வந்துள்ளதாகவும், அது குறித்து குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News