கோலாலம்பூர், செப்டம்பர்.18-
இன்று வியாழக்கிழமை மதியம் வரை, பெர்லிஸ், கெடா, பினாங், பேராக் மற்றும் சிலாங்கூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கெடா மாநிலத்தில் லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், போகோக் சேனா உள்ளிட்ட பல பகுதிகளில் மோசமான வானிலை நிலவும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், பேராக் மாநிலத்தில் பாகான் டத்தோ மற்றும் ஹீலிர் பேராக் பகுதிகளிலும், சிலாங்கூரில் சபாக் பெர்ணாம் பகுதியிலும் மோசமான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








